சிங்கள, தமிழ் புத்தாண்டைக் கொண்டாட வேண்டாம் என கூறவில்லை என்று இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
எனினும் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டைக் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக குடும்ப அங்கத்தவர்களுடன் மாத்திரம் இணைந்து புத்தாண்டைக் கொண்டாடுமாறு அறிவுறுத்தினார்.
இதேநேரம், தற்போது நாட்டில் காணப்படுகின்ற கொரோனா நிலைமைகளை மதிப்பீடு செய்து, புத்தாண்டில் முன்னெடுக்கப்படக்கூடிய நடைமுறைகள் குறித்து சுகாதார அமைச்சிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.