ஸ்லோவேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்லோவேனியாவில் இரண்டு இலட்சத்து 422பேர் குணமடைந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 63ஆவது நாடாக விளங்கும் ஸ்லோவேனியாவில் இதுவரை இரண்டு இலட்சத்து 18ஆயிரத்து 114பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் நான்காயிரத்து 63பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆயிரத்து 169பேர் பாதிக்கப்பட்டதோடு 9பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 13ஆயிரத்து 629பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 118பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.