துருக்கியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 34இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, துருக்கியில் 34இலட்சத்து 296பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட எட்டாவது நாடாக விளங்கும் துருக்கியில் இதுவரை 31ஆயிரத்து 892பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 42ஆயிரத்து 308பேர் பாதிக்கப்பட்டதோடு 179பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மூன்று இலட்சத்து எட்டாயிரத்து 942பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இரண்டாயிரத்து 182பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
]அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 30இலட்சத்து 59ஆயிரத்து 462பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.