தமிழகத்திலும் புதுச்சேரியிலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடையவுள்ளது.
வழக்கமாக மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடையும் நிலையில், மேலும் 2 மணி நேர பிரசாரத்துக்கு அனுமதியளித்துள்ள தேர்தல் ஆணையம், இரவு 7 மணி வரையில் பிரசாரத்தில் ஈடுபடலாமென அறிவித்துள்ளது.
இந்த நிலையில், முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக இறுதிக்கட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நாளை மறுதினம் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
புதுச்சேரியின் 30 தொகுதிகளுக்கும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் ஏப்ரல் 6ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில், 234 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட 3 ஆயிரத்து 998 பேர் களத்தில் உள்ளனர்.
அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, ம.நீ.மய்யம், நாம் தமிழர் கட்சி, அ.ம.மு.க. என ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது.