பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், இரண்டாயிரத்து 762பேர் பாதிக்கப்பட்டதோடு 26பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஆறாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை 43இலட்சத்து 62ஆயிரத்து 150பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு இலட்சத்து 26ஆயிரத்து 862பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மூன்று இலட்சத்து 22ஆயிரத்து 726பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 517பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 39இலட்சத்து 12ஆயிரத்து 562பேர் பூரண குணமடைந்துள்ளனர்.