இந்தோனேஷியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170யைக் கடந்தது.
தேசிய பேரழிவு தணிப்பு அமைப்பின் கூற்றுப்படி, அடோனாராவில் குறைந்தது 72பேர் உயிரிழந்தனர். அத்துடன் லெம்படாவில் 47பேர் உயிரிழந்தனர் மற்றும் 22பேர் காணவில்லை.
கத்தோலிக்க பெரும்பான்மை கிழக்கு நுசா தெங்கரா மாகாணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வீடுகளை இடமாற்றம் செய்வதாக இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ உறுதியளித்துள்ளார்.
மிக மோசமான பாதிப்புக்குள்ளான இரண்டு பகுதிகளான லெம்படா மற்றும் அடோனாரா தீவுகளுக்கு விஜயம் செய்தபோது விடோடோ இந்த உறுதிமொழியை அளித்தார்.
இரண்டு தீவுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5,000க்கும் மேற்பட்ட உதவிப் பொதிகளையும் ஜனாதிபதி விநியோகித்தார்.