மேலதிகமாக தடுப்பூசியை வழங்க வேண்டும் என்ற ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகாவின் கோரிக்கைக்கு பைசர் தலைமை நிர்வாக அதிகாரி ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த விடயத்தின் அத்தியாவசிய தேவையை அறிந்துகொண்டு அவர்கள் அனுமதி வழங்கியுள்ளதாக ஜப்பானிய தடுப்பூசி அமைச்சர் அறிவித்துள்ளார்.
இருப்பினும் பைசரிடமிருந்து கோரப்பட்ட மேலதிக தடுப்பூசி அளவுகளின் எண்ணிக்கையை அதிகாரிகள் குறிப்பிடவில்லை.
இருப்பினும் 16 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட செப்டம்பர் இறுதிக்குள் ஜப்பான் போதுமான விநியோகத்தைப் பெறும் என ஜப்பானிய தடுப்பூசி அமைச்சர் தெரிவித்துள்ளார்.