அமெரிக்காவில் 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அனைத்து 50 மாநிலங்களிலும் 16 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள், பிளஸ் டி.சி. மற்றும் புவேர்ட்டோ ரிக்கோ ஆகியோர் தடுப்பூசி போடுவதற்கு தகுதிபெறுவார்கள்.
இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘இன்று முதல் 16 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட தகுதியுடைவர்கள் ஆவர். தடுப்பூசி முற்றிலும் இலவசம் மற்றும் பாதுகாப்பானது.
பெருந்தொற்றை நாம் இப்படித்தான் முடிவுக்கு கொண்டு வரப்போகிறோம். தடுப்பூசியை போட்டுக்கொள்ளுங்கள். 16வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியை போட்டுக்கொள்ளுங்கள்’ என பதிவிட்டுள்ளார்.