தடுப்பூசி விரையமாவதை தடுப்பதற்கு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ தடுப்பூசிகளை வீணடித்துள்ள மாநிலங்களின் வரிசையில் தமிழகம் முதலிடத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அனைவரின் உயிர் காக்கும் தடுப்பூசியை அலட்சியமாக கையாள்வது கண்டனத்திற்கு உரியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா பரவலை தடுப்பத்தில் பிரதமர் மோடி அரசு படுதோல்வி அடைந்திருப்பது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேநேரம் ரெம்டெசிவர் மருந்து, ஒக்சிஜன் உள்ளிட்ட உயிர்காக்க தேவையானவை தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.