ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிநாட்டுத் துருப்புக்களைத் திரும்பப் பெறுவதற்கான ஒரு பகுதியாக உள்ளூர் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு இராணுவப் படைகளின் தளபதி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், செப்டம்பர் 11ஆம் திகதிக்குள் அனைத்து அமெரிக்கப் படைகளும் வெளியேறுவதாக அறிவித்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமெரிக்க இராணுவ ஜெனரல் ஸ்கொட் மில்லர் வெளிநாட்டு இராணுவ தளங்கள் படிப்படியாக ஆப்கானிய படைகளுக்கு ஒப்படைக்கப்படும் என்று கூறினார்.
இதுகுறித்து தலைநகர் காபூலில் அமெரிக்கப் படைகளுக்கும், ஆப்கானிஸ்தானில் நேட்டோ தீர்மான ஆதரவுத் திட்டத்திற்கும் 2018 முதல் கட்டளை தளபதியாக இருந்த ஸ்கொட் மில்லர் மேலும் கூறுகையில்,
‘எங்கள் படைகள் அனைத்தும் இப்போது பின்வாங்கத் தயாராகி வருகின்றன. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு திகதி மே 1ஆம் திகதி ஆகும். ஆனால் நாங்கள் உள்ளூர் நடவடிக்கைகளை ஏற்கனவே அதைத் தொடங்கினோம்.
நாங்கள் பூஜ்ஜிய அமெரிக்க படைகளுக்கு பின்வாங்கும்போது, நாங்கள் (இராணுவ) தளங்களை முதன்மையாக (ஆப்கானிஸ்தான்) பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பிற ஆப்கானிய படைகளுக்கு மாற்றுவோம்’ என கூறினார்.
அமெரிக்காவின் மிக நீண்ட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதன் அவசியமாக, நியூயோர்க் நகரம் மற்றும் வொஷிங்டன் டி.சி.யில் 9/11 தாக்குதல்களின் 20ஆவது ஆண்டுவிழாவான செப்டம்பர் 11ஆம் திகதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து மீதமுள்ள 2,500 அமெரிக்க துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கான திட்டத்தை பைடன் அண்மையில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.