சிம்பாப்வே அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டியில், பாகிஸ்தான் அணி 24 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியது.
ஹராரே மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மொஹமட் ரிஸ்வான் ஆட்டமிழக்காது 91 ஓட்டங்களையும் பாபர் அசாம் 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்திய அணியின் பந்துவீச்சில், லுக் ஜோங்வே 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனைத்தொடர்ந்து 166 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சிம்பாப்வே அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 141 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் பாகிஸ்தான் அணி 24 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, வெஸ்லி மாதேவர் 59 ஓட்டங்களையும் ததிவானாஷே மருமணி 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில், ஹசன் அலி 4 விக்கெட்டுகளையும் ஹரிஸ் ரவூப் 2 விக்கெட்டுகளையும் மொஹமட் ஹஸ்னெய்ன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, ஹசன் அலியும் தொடரின் நாயகனாக மொஹமட் ரிஸ்வானும் தெரிவுசெய்யப்பட்டனர்.