இந்த கோடையில் அமெரிக்கர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பயணிக்க முடியும் என ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்துள்ளார்.
எனினும், அமெரிக்கர்கள் கொவிட்-19 தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டால் மாத்திரமே இது சாத்தியம் என அவர் தெரிவித்தார்.
நியூயோர்க் டைம்ஸிடம் வழங்கிய செவ்வியில், ‘இரு தரப்பினரும் ஒரே தடுப்பூசி போடும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளதால் இது சாத்தியமாக இருக்க வேண்டும்’ என்று கூறினார்.
இருப்பினும், அவர் சரியான கால அட்டவணையை வழங்கவில்லை. இது தொற்றுநோயியல் நிலைமையை சார்ந்தது என்று கூறினார்.
ஐரோப்பிய நாடுகள் ஒரு வருடத்திற்கும் மேலாக அமெரிக்காவிலிருந்து அத்தியாவசியமற்ற பயணங்களை தடை செய்துள்ளன.
ஐரோப்பிய ஒன்றியம் ஜனவரி மாதத்தில் வெளிநாட்டு பார்வையாளர்கள் மீதான அதன் பரிந்துரைகளை கடுமையாக்கியது.
ஆனால் கிரேக்கம், ஏற்கனவே எதிர்மறை சோதனைகளின் ஆதாரத்துடன் அமெரிக்கர்கள் நுழைய முடியும் என்று கூறியுள்ளது.