கொரோனா பாதிப்பு காரணமாக ஐ.பி.எல். தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஐ.பி.எல். தொடரில் விளையாடிய அவுஸ்ரேலிய வீரர்கள் மாலைதீவுகளுக்குச் சென்றுள்ளனர். அங்கிருந்து அவர்கள் தமது நாட்டுக்கு அழைத்துச்செல்லப்படவுள்ளனர்.
இந்த நிலையில், மாலைதீவுகளில் உள்ள மதுபான விடுதியொன்றில் சன்ரைசர்ஸ் மற்றும் அவுஸ்ரேலிய அணிகளின் முன்னணி வீரரான டேவிட் வோர்னரக்கும் மற்றும் அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் வீரரும் வர்ணணையாளருமான மைக்கேல் ஸ்லேட்டருக்குமிடையே கைகலப்பு நடைபெற்றதாக அவுஸ்ரேலிய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இருவரும் முதலில் வாய்த்தர்க்கத்தில் ஆரம்பித்து பின்னர் மோதலில் ஈடுபட்டதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்தத் தகவலை சம்பந்தப்பட்ட இருவருமே மறுத்துள்ளனர் என்றும் தாங்கள் இருவருமே நல்ல நண்பர்கள் என்பதால் அப்படி நடக்க வாய்ப்பே இல்லை என்று இருவருமே மறுப்பு தெரிவித்ததாகவும் அந்த ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.