பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாக இருதரப்பினரும் பரஸ்பர குண்டுகள் வீசித் தாக்கிக்கொள்ளும் நிலையில், ஹமாஸ் இயக்கத்தினர் நடத்திய தாக்குதலில் 6 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
அதற்கு பதிலடியாக இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் 16 குழந்தைகள் உட்பட 65 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அத்தோடு, 400க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
காஸா பகுதியில் உள்ள முக்கியக் கட்டடங்களையும் இஸ்ரேல் குண்டு வீசித் தகர்த்து வருகிறது.
இந்தத் தாக்குதலில் தங்கள் இயக்கத்தைச் சேர்ந்த முக்கியத் தளபதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் இயக்கமே அறிவித்துள்ளது.