வட ஆபிரிக்க நாடான மொரோக்கோவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கொரோனா வைரஸ் தொற்றினால், ஐந்து இலட்சத்து ஆயிரத்து 692பேர் குணமடைந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிகபட்ச உயிரிழப்பினை சந்தித்த 41ஆவது நாடாக விளங்கும் மொரோக்கோவில் இதுவரை ஐந்து இலட்சத்து 14ஆயிரத்து 432பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒன்பதாயிரத்து 88பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 268பேர் பாதிக்கப்பட்டதோடு 5பேர் உயிரிழந்தனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மூவாயிரத்து 652பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 108பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.