கோவிஷீல்ட் தடுப்பூசியின் ஒரு அளவு, கொரோனாவால் உயிரிழக்கும் அபாயத்தை 80 சதவீதம் குறைக்கும் என இங்கிலாந்து பொது சுகாதாரத் துறை மையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் தொற்று ஏற்பட்டு 28 நாட்களுக்குள் உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்களை திரட்டிய ஆய்வாளர்கள், தடுப்பூசியின் தரம் குறித்து மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அதேபோல இரண்டு அளவை எடுத்துக் கொண்டவர்கள் கொரோனாவால் உயிரிழக்கும் அபாயம் 97 சதவீதமும் குறைவதாகப் இங்கிலாந்து பொது சுகாதாரத் துறை மையம் தெரிவித்துள்ளது.
ஒக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்களும் அஸ்ட்ராஸெனகா நிறுவனமும் இணைந்து கண்டுபிடித்துள்ள இந்தத் தடுப்பூசியைத்தான் சீரம் நிறுவனம், இந்தியாவில் கோவிஷீல்ட் என்ற பெயரில் உற்பத்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.