இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவின் வடமேற்கு கடற்கரையில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஜேர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (ஜிஎஃப்இசட்) தெரிவித்துள்ளது.
இன்று (வெள்ளிக்கிழமை) இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 10 கிமீ (6.21 மைல்) ஆழத்தில் இருந்தது என்று ஜிஎஃப்இசட் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் வானிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனமான பி.எம்.கே.ஜி இந்த நிலநடுக்கத்தை 7.2 ரிக்டர் அளவு என மதிப்பிட்டுள்ளது.
ஆனால், இந்த நிலநடுக்கத்தினால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. அதேவேளை இந்த நிலநடுக்கத்தினால் எவ்வித உயிரிழப்போ அல்லது சேதங்களோ பதிவாகவில்லை.
சுமத்ராவின் மேற்கு கடற்கரையில் உள்ள பதாங் நகரில் நிலநடுக்கம் வலுவாக உணரப்பட்டதாக கூறப்படுகின்றது.
கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி வடமேற்கு சுமத்ராவின் கடற்கரையில் 9.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் சுனாமியை தூண்டியதால், இலங்கை, இந்தியா, தாய்லாந்து மற்றும் ஒன்பது நாடுகளில் 230,000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர்.