கேரளாவில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக குறித்த மாநிலத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தாக்டே புயலாக உருவாகியுள்ளது. இதனால் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக திருவனந்தபுரம், ஆழப்புழா உள்ளிட்ட பல மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
இதன்காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் கேரளமாநிலத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தாக்டே புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.