ஆந்திராவில் கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழுந்தைகளுக்கு நிவாரணத்தொகை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த குழுந்தைகளுக்கு 10 இலட்சம் ரூபாய் வங்கி கணக்கில் வைப்பிலிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா பெருந் தொற்றின் 2 ஆவது அலையில், ஆந்திரப்பிரதேசத்தில் பெற்றோரை இழந்து, ஆதரவற்று நிற்கும் குழந்தைகளின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை புரிந்து கொண்டு ஒவ்வொரு குழந்தைக்கும் 10 இலட்சம் ரூபாய் வைப்பிலப்படவுள்ளது. இதற்கான பணிகளை உடனடியாக மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.