இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 4 ஆயிரத்தை கடந்துள்ளது.
இதன்படி 4 ஆயிரத்து 340 பேர் நேற்று ஒரேநாளில் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 78 ஆயிரத்தை கடந்துள்ளது.
அத்துடன் நேற்று ஒரேநாளில் புதிதாக 2 இலட்சத்து 63 ஆயிரத்து 45 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனையடுத்து தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 52 இலட்சத்து 27 ஆயிரத்தை கடந்துள்ளது.
இவர்களில் 2 கோடியே 15 இலட்சத்து 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 33 இலட்சத்து 59 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இவ்வாறு சிகிச்சைப் பெறுபவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது.