நுவரெலியா டயகம வைத்தியசாலையின் நடவடிக்கைகள் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக லிந்துலை பொதுசுகாதார வைத்திய அதிகாரி ஆர்.ஜெயராஜன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா டயகம வைத்தியசாலையின் உதவி வைத்தியருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று (புதன்கிழமை) உறுதிபடுத்தப்பட்டது.
இதனையடுத்து, வைத்தியசாலையின் நடவடிக்கைகள் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக லிந்துலை பொதுசுகாதார வைத்திய அதிகாரி ஆர்.ஜெயராஜன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, வைத்தியருடன் தொடர்பைப் பேணிய 18 உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பிரதேச மக்களை வைத்திய சிகிச்சைக்காக அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலைக்குச் செல்லுமாறு பொது சுகாதார வைத்திய அதிகாரி ஆர்.ஜெயராஜன் குறிப்பிட்டுள்ளார்.