கர்நாடக மாநிலத்திற்கு மேலும் 2 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் வந்து சேர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகளே இவ்வாறு வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்வதன் ஒரு பகுதியாக 9 இலட்சத்து 50 ஆயிரம் கோவிஷீல்டு மற்றும் 1 இலட்சத்து 44 ஆயிரம் கோவாக்சின் என இதுவரை 10 இலட்சத்து 94 ஆயிரம் டோஸ்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கர்நாடக மாநிலத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 30 ஆயிரத்து 309 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், 525 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.