கறுப்பு பூஞ்சை எனப்படும் பிளாக் ஃபங்கஸ் பரவலை பெருந்தொற்றாக அறிவிக்குமாறு மாநில அரசுகளை சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து குணமடைபவர்களுக்கு இந்த நோய் ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோய் தாக்கத்தினால் இதுவரை 90 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தலை, முகம், வாய் உள்ளிட்ட பகுதிகளில் இந்த பூஞ்சை பரவுவதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.