வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் எதிர்வரும் 24 ஆம் திகதி யாஸ் என்ற புதிய புயல் உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த கடல் பகுதியில் மே 23 ஆம் திகதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு மையம் புதிய புயலாக உருவாகவுள்ளது.
இந்த புயல் எதிர்வரும் 26 ஆம் திகதி ஒடிசா இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் மே மாதம் 22 ஆம் திகதி முதல் வங்கக்கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் புயல் தாக்கம் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர்.