கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் 3 மாவட்டங்களைச் சேர்ந்த 9 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய யாழ்ப்பாணம்- பலாலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலாலி வடக்கு கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று மட்டக்களப்பு- கல்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடு கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோன்று மொனராகலை- செவனகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செவனகல, கிரிவெவ, ஹபரத்தவெல, மஹாம,பஹிராவ, ஹபருகல, இதிகொலபெலஸ்ஸ ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன