இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 2 இலட்சத்து 59 ஆயிரத்து 269 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 60 இலட்சத்து 30 ஆயிரத்தை கடந்துள்ளது.
இவர்களில் 2 கோடியே 27 இலட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 30 இலட்சத்து 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இவ்வாறு சிகிச்சைப் பெறுபவர்களில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் நேற்று 4 ஆயிரத்து 209 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 91 ஆயிரத்தை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.