ஜெனீவா பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில், கனடாவின் டேனிஸ் ஷபலோவ் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், கனடாவின் டேனிஸ் ஷபலோவ், அர்ஜெண்டீனாவின் பப்லோ கியூவாசுடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை டேனிஸ் ஷபலோவ், 6-4 என கைப்பற்றினார்.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், இருவரும் விட்டுக்கொடுக்காமல் விளையாடினர்.
எனினும், இந்த செட்டில் இறுதிவரை கடும் ஆக்ரோஷமாக விளையாடிய டேனிஸ் ஷபலோவ், 7-5 என செட்டைக் போராடி கைப்பற்றி வெற்றிபெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ள டேனிஸ் ஷபலோவ், இன்று நடைபெறும் சம்பியன் கிண்ணத்துக்கான போட்டியில், நோர்வேயின் காஸ்பர் ரூட்டை எதிர்கொள்ளவுள்ளார்.