காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் மாபெரும் வெற்றியடைந்துள்ளதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெருமிதம் கொண்டுள்ளார்.
சர்வதேச அழுத்தங்களை தொடர்ந்து 11 நாட்;களுக்கு பிறகு இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்திற்கு இடையே நடைபெற்று வந்து மோதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளநிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘எங்களது இலக்கை நாங்கள் அடைந்து விட்டோம். இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது’ என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கடந்த 11 நாட்களாக இரு தரப்புக்கும் இடையே நடந்த சண்டையில், காஸா நகரில் மட்டும் 100 பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 232பேர் கொல்லப்பட்டனர். 1500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இஸ்ரேலை பொறுத்தவரையில் 5 வயது பச்சிளம் குழந்தைகள் உட்பட 12பேர் உயிரிழந்தனர். 300க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
இதேவேளை, பாலஸ்தீனிய ஆயுதக் குழுக்களுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான மோதலில் காசா பகுதியில் 257 பேர் கொல்லப்பட்டதாகவும் 8,538பேர் காயமடைந்ததாகவும், காயமடைந்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களுக்கு பெரும் சுகாதார வசதிகள் தேவைப்படும் என்றும் உலக சுகாதார அமைப்பின் செய்திதொடர்பாளர் மார்கரேட் ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.