கிளிநொச்சியில் 15 வயதுச் சிறுமி உயிரிழந்த நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாகேந்திரபுரம் கிராம அலுவலகர் பிரிவைச் சேர்ந்த குறித்த சிறுமி நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், அவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்கு, அதிதீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த இரவு உயிரிழந்தார்.
இதையடுத்து, உயிரிழந்த சிறுமியின் பி.சி.ஆர். மாதிரிகள் இன்று யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிறுமியின் சடலம் சுகாதார முறைப்படி நாளை வவுனியாவில் உள்ள மின்தகன மேடையில் தகனம் செய்யப்படும் என கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.