வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று நோயால் உயிரிழந்துள்ளார்.
இவர், சிறுநீரக நோய் காரணமாக சில நாட்களுக்கு முன்பு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவருக்கு முன்னெடுக்கப்பட்ட அன்ரிஜென் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர், வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று (சனிக்கிழமை) உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர், கிடாச்சூரி பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வவுனியா வைத்தியசாலையில் மூன்றாவது கொரோனா நோயாளி மரணமடைந்துள்ளதுடன் மாவட்டத்தில் மொத்தமாக இதுவரை எட்டுப் பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.