குருநாகல், காலி மற்றும் மாத்தறை மாவட்ட மக்களுக்கு சினோபார்ம் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது.
மேல் மாகாணத்துக்கு வெளியே கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நேற்று குருநாகல் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று முதல் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்த மாவட்டங்களில் வாழும் மக்களுக்கு நேற்றைய தினம் இலங்கையை வந்தடைந்த 5 லட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் ஏற்றப்படும் என்றும் இராணுவத் தளபதி கூறினார்.