வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய மேலும் 50 இலங்கையர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேர காலப்பகுதியில் தொற்று உறுதி செய்யப்பட்ட 2 ஆயிரத்து 377 பேரில் 50 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திம்பியவர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜனவரி மாதம் முதல் நாடு திரும்பிய பல இலங்கையர்கள், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்குப் பின்னர் திரும்பி வந்த சிலர் உட்பட பலர் இவர்களுள் அடங்குகின்றனர்.
பல நாடுகளில் கொரோனா வைரஸின் பல்வேறு வகைகள் பரவியிருந்தாலும், இலங்கையர்களை, குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களை திருப்பி அனுப்புவது தொடரும் என்று அரசாங்கம் கூறியிருந்தது.
பல நாடுகளில் கொரோனா வைரஸ் வகைகள் குறித்து அதிகாரிகள் விழிப்புடன் இருப்பதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை திருப்பி அனுப்பவும் தனிமைப்படுத்தவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்தார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து சமூகத்திற்கு வைரஸ் பரவாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த செயன்முறை கட்டமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.