சினோபாம் கொரோனா தடுப்பூசியின் மேலும் ஒருதொகை இலங்கை வந்தடையவுள்ளது.
கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூன் 8ஆம் திகதி மேலும் 20 இலட்சம் சினோபாம் தடுப்பூசியை இலங்கைக்கு வழங்குவதற்கு சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.