உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 17 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர கொரோனா வைரஸ் தொற்றினால் 35இலட்சத்து 37ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 15கோடியே 19இலட்சத்து 56ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த முதல் நாடாக அமெரிக்கா விளங்குகின்றது.
இதற்கு அடுத்தப்படியாக அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நாடுகளாக, இந்தியா, பிரேஸில், பிரான்ஸ் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் உள்ளன.