கிரேக்கத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை நான்கு இலட்சத்தை நெருங்குகின்றது.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கிரேக்கத்தில் மூன்று இலட்சத்து 98ஆயிரத்து 898பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 47ஆவது நாடாக விளங்கும் கிரேக்கத்தில் இதுவரை மொத்தமாக 11ஆயிரத்து 995பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆயிரத்து 928பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 40பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 21ஆயிரத்து 768பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 521பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இதுதவிர வைரஸ் தொற்றிலிருந்து மூன்று இலட்சத்து 65ஆயிரத்து 135பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.