அமைச்சர் ஜெய்சங்கருக்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், 5 நாட்கள் சுற்றுப்பயணமாக வொஷிங்டன் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று ஆன்டனி பிளிங்கினை சந்தித்து, இருநாடுகளுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக அவர் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் அனைவருக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு முன்னெடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஆப்கான் படைக்குறைப்பு மற்றும் இந்தோ பசிபிக் தடையற்ற வர்த்தகம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.