சினோபார்ம் தடுப்பூசிகளின் இரண்டாவது டோஸ் ஜூன் 8ஆம் திகதி முதல் வழங்கப்படுமென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
சினோபார்ம் தடுப்பூசிகளின் இரண்டாவது டோஸ் நான்கு வார இடைவெளியில் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள அவர், முதல் டோஸைப் பெற்றவர்கள் அவை செலுத்தப்பட்ட திகதியின் அடிப்படையில், அதே மையங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதன்படி, மே 8ஆம் திகதி முதல் டோஸ் பெற்றவர்கள் ஜூன் 8ஆம் திகதி இரண்டாவது டோஸைப் பெறுவார்கள் என்றும் மே 9ஆம் திகதி முதல் டோஸ் பெற்றவர்கள் ஜூன் 9 ஆம் திகதி இரண்டாவது டோஸைப் பெறுவார்கள் என்றும் தெரிவித்தார்.
மேலும் தங்கள் தடுப்பூசி அட்டைகளை மையங்களுக்கு கொண்டு செல்லுமாறும் மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.