கொழும்பு துறைமுகத்திற்கு அண்மையில் நங்கூரமிடப்பட்டிருந்த எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்துக்கு உள்ளாமையால், உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லையென அரசாங்கம் வலியுறுத்தியது.
எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ல் என்ற கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக அமைச்சரவை இணை செய்தித் தொடர்பாளர் உதய கம்மன்பில இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கப்பலில் இருந்து மாசுபாடு உப்பு உற்பத்தி நடைபெறும் பகுதிகளுக்கு பரவவில்லை என்றும் கம்மன்பில கூறினார்.
இதனால், நாட்டில் உப்பு உற்பத்தி பாதிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ சுற்றுச்சூழலில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக நீர்கொழும்பு – மொரட்டுவை பகுதிகளில் குப்பைகள் கரை ஒதுங்கியுள்ளன
பிளாஸ்டிக் மற்றும் ஏனைய அபாயகரமான பொருட்கள் நிறைந்த பைகள் தொடர்ந்து கரைக்குச் செல்லப்படுவதால் கடற்கரையில் தூய்மைப்படுத்தும் பணி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.