பிரான்ஸில் இரண்டு அளவு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டோரின் எண்ணிக்கை 12 மில்லியனை கடந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தரவுகளின் படி, நேற்றைய நிலவரம் படி, 27 மில்லியன் பேர் (துல்லியமாக 27,484,767 பேர்) தங்களது முதலாவது தடுப்பூசியினை போட்டுக்கொண்டுள்ளனர்.
அதேவேளை, 12 மில்லியனுக்கும் அதிகமானோர் (துல்லியமாக 12,009,164 பேர்) தங்களது இரண்டாவது தடுப்பூசியினை போட்டுக்கொண்டுள்ளனர்.
அதேவேளை, எதிர்வரும் ஜூன் 9ஆம் திகதி முதல் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஐரோப்பியர்கள் பிரான்சுக்கு பி.சி.ஆர். முடிவுகளின்றி வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விதி பிரித்தானியாவில் இருந்து வருவோருக்கு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் இருந்து வருவோர், தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தாலும் பி.சி.ஆர். முடிவுகள் கட்டாயம் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பிரான்ஸில் நூற்றிற்கும் அதிகமான இந்திய வைரஸ் மாறுபாடு தொற்று இனங்காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.