இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 67 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதில் ஆண்கள் 43 பேரும் பெண்கள் 24 பேரும் அடங்குவதாக அந்தப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் மே மாதம் 17ஆம் திகதி முதல் ஜுன் 8ஆம் திகதி வரையில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.
6 பேர் வீட்டிலும் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போதும் 56 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 910 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 2 ஆயிரத்து 735 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 13 ஆயிரத்து 396 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் ஒரு இலட்சத்து 80 ஆயிரத்து 427 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 31 ஆயிரத்த 59 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.