ஸ்பெயினில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து 35இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்பெயினில் வைரஸ் தொற்றிலிருந்து 35இலட்சத்து ஆயிரத்து 83பேர் மீண்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 11ஆவது நாடாக விளங்கும் ஸ்பெயினில் இதுவரை 37இலட்சத்து 15ஆயிரத்து 453பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 80ஆயிரத்து 332பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் நான்காயிரத்து 427பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 23பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 34ஆயிரத்து 39பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 40பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.