நமீபியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, நமீபியாவில் 60ஆயிரத்து 329பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 108ஆவது நாடாக விளங்கும் நமீபியாவில் கொவிட்-19 தொற்றினால் இதுவரை 950பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 515பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 14பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஆறாயிரத்து 610பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 57பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 52ஆயிரத்து 769பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.