புதிய சுற்றாடல் சட்டத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சுற்றாடல் அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
சுற்றாடல் சட்டங்களை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராத தொகையை, புதிய சட்ட திருத்தத்தினூடாக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அமுலிள்ள 5,000 ரூபாய் அபராதத் தொகையை ஒரு இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
இதுவரை சதுப்பு நிலம் என்ற பதத்திற்கு காணப்பட்ட குறைபாடு, புதிய சட்ட திருத்தத்தினூடாக மறுசீரமைப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரசாயன பயன்பாடு தொடர்பிலும் பல்வேறு விடயங்கள் புதிய சட்டத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.