பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்ட தெற்காசியாவின் பாரிய சிறுநீரக வைத்தியசாலையான தேசிய சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று(வெள்ளிக்கிழமை) வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கைக்கான சீனத் தூதுவர் உள்ளிட்ட பிரமுகர்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
2015ஆம் ஆண்டு சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டிந்த அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த வேண்டுகோளுக்கு அமைய சீன அரசாங்கத்தினால் இந்த வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டது.