பெருவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 20இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பெருவில் கொவிட்-19 தொற்றினால் 20இலட்சத்து மூவாயிரத்து 625பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 17ஆவது நாடாக விளங்கும் பெருவில் இதுவரை ஒரு இலட்சத்து 88ஆயிரத்து 708பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், இரண்டாயிரத்து 566பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 265பேர் உயிரிழந்துள்ளனர்.
அங்கு வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டாயிரத்து 536பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.