குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன ஹெட்டியாராச்சி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை இன்று (புதன்கிழமை) கொழும்பு உயர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு ரொக்கப் பிணைகளிலும் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன ஹெட்டியாராச்சி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த நிறுவனம் அலட்சியமாக செயற்பட்டதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.