12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடலாமா என்பது குறித்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நிபுணர் ஆலோசனையின் அடிப்படையிலேயே அரசாங்கம் முடிவுகளை எடுத்து வருவதாக சுகாதார மற்றும் சமூக பாதுகாப்புத் துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விடயம் தொடர்பாக தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான குழுவிடம் அதன் முறையான பரிந்துரைக்கு அரசாங்கம் கேட்டுள்ளது என்றும் சரியான நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
18 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த குறித்த குழு பரிந்துரைக்கவில்லை என அமைச்சர் லிஸ் ட்ரஸ் கூறியதை அடுத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.