பெலாரஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து, மொத்தமாக நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பெலாரஸில் கொரோனா வைரஸ் தொற்றினால் நான்கு இலட்சத்து இரண்டாயிரத்து 202பேர் குணமடைந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 49ஆவது நாடாக விளங்கும் பெலாரஸில் இதுவரை நான்கு இலட்சத்து ஒன்பதாயிரத்து 385பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மூவாயிரத்து 25பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நான்காயிரத்து 158பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.