பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து இலட்சத்தைக் கடந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன .
இதே வேளை பிரேசிலில் கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் 2 ஆயிரத்து 247 கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 868 ஆக அதிகரித்துள்ளதோடு உலகளாவிய ரீதியில் அதிகளவான கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்பட்ட நாடுகளின் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடகக்கது .