பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நாட்களில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்களுக்காக வரையறுக்கப்பட்ட அளவில் பொது போக்குவரத்து சேவைகள் இடம்பெறும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளினால் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்து சேவைகள் இடம்பெறும் என்றாலும் அவை மாகாண எல்லைகளை கடக்க அனுமதி வழங்கப்படாது என கூறினார்.
இதேவேளை மாகாணங்களுக்குள் இன்று முதல் சுமார் 17 ரயில் சேவைகள் திட்டமிட்டபடி இயங்கும் என்றும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
அத்தியாவசிய சேவைகளுக்காக இதுவரை இயக்கப்படும் பிற பொது போக்குவரத்து சேவைகள் எந்த மாற்றமும் இல்லாமல் இந்த காலகட்டத்தில் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்திய போதிலும் நாடு முழுமையாக திறக்கப்படாத நிலையில் த்தியாவசிய நோக்கத்திற்காக தவிர்ந்த பயணங்களை தவிர்க்குமாறு அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.